தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பவள விழாவை முன்னிட்டு நாளை “ரிதம் 75″கலை நிகழ்ச்சி கொண்டாட்டம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பவள விழாவை முன்னிட்டு நாளை ” ரிதம் 75 ” பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

தூத்துக்குடி வ.சிதம்பரம் கல்லூரி தனது 75வது பவள விழாவை கொண்டாடி வருகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான “ரிதம் 75 “கலை நிகழ்ச்சிகள் நாளை 27 – 2.- 2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரி கலை அரங்கில் நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு தலைமையில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் செய்து வருகின்றனர்.