குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய தகவல் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய தகவல் :
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதற்கான அடுத்த கட்ட தேர்வு நடைமுறைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் வெற்றிக்கு தேவையான கட் ஆஃப் பெற்ற தேர்வர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

குறைபாடாக சான்றிதழ் பதிவேற்றம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 01/2024 நாள்: 30.01.2024 இன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி – IV பணிகள்) உள்ள வனக் காவலர் மற்றும் வனக் காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கு தேர்வர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்பட்டதில், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் சில தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை குறைபாடாக / சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

போட்டோ நன்றி   தினமலர்

எனவே, இத்தகைய தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக 30.08.2025 முதல் 05.09.2025 இரவு 11.59 மணி வரை விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை மறுபதிவேற்றம் செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இத்தகவல் அத்தேர்வர்களுக்கு மட்டும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, அத்தேர்வர்கள் அனைவரும் மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் ஒருமுறைப் பதிவு தளம் (OTR) வாயிலாக பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவ்வாறு உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத தேர்வர்களின் உரிமைகோரல் (claim)/ விண்ணப்பம் நிராகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.