தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் ஐஏஎஸ் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையம் தொடக்கம் :
அட்மிஷன் நடைபெறுகிறது!
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி, சென்னை கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து தூத்துக்குடியில் இந்திய ஆட்சிப் பணி தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் பயிற்சி மையமத்தை துவக்கியுள்ளது.
இனி தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவ – மாணவியர் இந்திய ஆட்சிப் பணி தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு படிக்க வெளியூர் செல்லத் தேவையில்லை.
தூத்துக்குடி வ உ சிதம்பரம் கல்லூரியில் அதற்கான மையம் உருவாக்கபட்டுள்ளது*

வ உ சிதம்பரம் கல்லூரியின் பவள விழா நிகழ்வுகளின் ஒரு பகுதியாக, சென்னை கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி, உடன் செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU), வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் அரசுப்பணித் திறன்களை மேம்படுத்தும் இன்னொரு முக்கிய முயற்சியாகும்.
இந்த முயற்சி வ.உ.சி கல்லூரி மாணவர்களுக்கும், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள தேர்வர்களுக்கும் வழங்கப்படுகிறது.
கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி, வ.உ.சிதம்பரம் கல்லூரி வளாகத்தில், தூத்துக்குடியில் தனது பயிற்சி மையத்தை தொடங்கி, UPSC மற்றும் TNPSC தேர்வுகளுக்கான பயிற்சிகளை வழங்குகிறது.

2026–2027 கல்வியாண்டிற்கான சேர்க்கைகள் நடைபெறுகின்றன. வார நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் வகுப்புகள் நடைபெறும்.தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, நாகர்கோவில் மற்றும் விருதுநகர் மாவட்டங்களிலுள்ள பங்குதாரர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் இந்த முயற்சி விரிவுபடுத்தப்படுகிறது.
மேலும், வெளியூரில் இருந்து வரும் மாணவர்களுக்கு விடுதி வசதியும், வார இறுதி நாட்களில் தங்கிப் படிக்கும் வசதியும் வழங்கப்படும்.
இந்த அகாடமி பூமிநாதன் (Founder & Director) தலைமையில் செயல்படுகிறது.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் அனைவரையும் அன்புடன் கலந்து கொள்ள அழைக்கிறோம்.
மேலும் தகவல் மற்றும் தொடர்புக்கு
9444227273 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.












