கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நல்லிணக்க தினம் – 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நல்லிணக்க தினம் – 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட அணி எண்: 132 மற்றும் சமவாய்ப்பு மையம் இணைந்து நல்லிணக்க தினம் – 2026 விழிப்புணர்வு நிகழ்ச்சியை கல்லூரி மினி அரங்கில் சிறப்பாக நடத்தினர்.

“நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வளர்ப்போம்” என்ற நோக்கத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் மாணவர்களிடையே நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், சமூக ஒற்றுமை மற்றும் அமைதியான முறையில் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு நல்லிணக்க உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். அனைவரும் சமூகத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை நிலைநாட்ட பாடுபட உறுதியேற்றனர்.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் நாட்டுநலப் பணித்திட்ட தன்னார்வத் தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.