நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அளவில் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவியாக கடையநல்லூர் அரசு கல்லூரி மாணவி தேர்வு
கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணி:007 மாணவி மாலதி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு விருது மற்றும் சான்றிதழ் பெற்றார்.
பல்கலைக்கழகத்தில் 10.10.25 அன்று நடந்த வருடாந்திர பல்கலைக்கழக நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் ஆய்வுக் கூட்ட விழாவில் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் முனைவர். ஸ்ரீனிவாஸ் தொடக்க விழா தலைமை உரையாற்றினார்.

சிறப்பு தலைமை விருந்தினராக தென் இந்திய மண்டல நாட்டு நலப்பணித்திட்ட இயக்குனர் முனைவர். சாமுவேல் செல்லையா விழா பேருரை நிகழ்த்தினார். முன்னாள் ஒருங்கிணைப்பாளர். ராஜலிங்கம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.வெளியப்பன் நிகழ்வை ஒருங்கிணைத்து சிறப்பாக நாட்டு நலப்பணித்திட்ட பங்களிப்பு செய்த மாணவ மாணவியர் மற்றும் மற்றும் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளில் உள்ள அனைத்து நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், மாணவ மாணவியர் மற்றும் பல்கலைக்கழக மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
மேலும் விருது பெற்ற நாட்டு நலப் பணித்திட்ட மாணவி மாலதியை கல்லூரி முதல்வர் ஜெயா, ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ராம்சங்கர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். பால் மகேஷ் மற்றும் அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.












