கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதயாத்திரை பக்தர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதயாத்திரை பக்தர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி !

கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டுநலப் பணித்திட்ட அணி எண் 132 மற்றும் சாலை பாதுகாப்பு மன்றம் இணைந்து, இருக்கன்குடி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை 13.08.2026 அன்று மாலை கல்லூரி நுழைவாயில் பகுதியில் நடத்தினர்.

“விழிப்போடு நடப்போம்… விபத்தின்றி அடைவோம்!” என்ற கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தலைமை தாங்கினார்.
பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதிபலிப்பு பட்டைகள் , பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் பக்தர்கள் வாகன ஓட்டுநர்களுக்கு தெளிவாகத் தெரிவதற்கு பிரதிபலிப்பு பட்டைகள் உதவும் வகையில் அவற்றின் பயன்பாடு குறித்து செயல்விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி நாட்டுநலப் பணித்திட்ட அணி எண் 132, சாலை பாதுகாப்பு மன்றம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேற்கொண்டனர்.