நாளை 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்: +2 & 10 பொதுத்தேர்வு எழுத போகும் மாணவ மாணவிகளே தேர்வில் எளிதில் வெற்றி பெற இதனை கடை பிடிக்கவும்

நாளை 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு ஆரம்பம்:
+2 & 10 பொதுத்தேர்வு எழுத போகும் மாணவ மாணவிகளே தேர்வில் எளிதில் வெற்றி பெற இதனை கடை பிடிக்கவும்

அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிப்பது முக்கியம்.

முழுவதும் எழுதிய பிறகு குறைந்தது 5 நிமிடங்களாவது எழுதியதைப் படித்துப் பார்க்க நேரம் வைத்துக்கொள்ள வேண்டும்.

விடைகளைப் பக்கம் பக்கமாக எழுதாமல் பாயிண்ட் பாயிண்ட்டாக சுருக்கமாக எழுத வேண்டும்.

எத்தனை வார்த்தைகளில் பதில் என்பதில் கட்டுப்பாடு அவசியம்.

கையெழுத்தைப் பிறர் புரியும்படி எழுத வேண்டும்.

கேள்வி எண், அதன் பகுதி எண் ஆகியவற்றைச் சரியாக எழுதுங்கள்.

ஓரிரு வார்த்தைகளில் பதில் கூற வேண்டியது, ஒரு செயலைச் சரியான பதிலாகத் தேர்ந்தெடுப்பது ஆகியவற்றில் வேகம் அவசியம். நன்கு தெரிந்த விடையை டக் டக் என்று தேர்வு செய்து எழுதுங்கள். தெளிவில்லாததைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

விடைத்தாள்களில் மத குறியீடை (ஊ,786,+) தவிர்க்கவும்

ஜாகிர் உசேன் ME MBA (Ph D)
Career Guidance Guru
98423 76822