தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் கைத்தொழில் பணிமனை
தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரியின் ஆங்கிலத்துறை சார்பாக “தொழில் முனைவோர் பார்வை: கயிற்றுப் பின்னல் கைத்தொழில்” என்ற தலைப்பில் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்காக 28.08.2025 அன்று ஆங்கிலத்துறை சார்பில் ஒரு பணிமனை நடத்தப்பட்டது.
கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு பணிமனையைத் தொடங்கி வைத்து, பயிற்றுவிப்பாளர்களுக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.

இந்தப் பணிமனை, தொழில் முனைவோர் வாழ்க்கைச் சுழற்சி மற்றும் புதுமையான தயாரிப்புகள் (கயிற்றுப் பின்னல் கைத்தொழில்) உருவாக்கம் பற்றிய ஒருங்கிணைந்த புரிதலை மாணவர்களுக்கு அளித்தது.
அனுபவமிக்க பயிற்றுவிப்பாளர்கள், கயிற்றுப் பின்னல் முடிச்சுகள் மற்றும் கோர்த்தல் பற்றிய நுட்பங்களை மாணவர்களுக்கு பயிற்றுவித்தனர். மேலும், கயிற்றுப் பின்னல் முறையைப் பயன்படுத்தி கோஸ்டர்கள் மற்றும் பாய்கள் செய்வதையும் கற்றுக்கொடுத்தனர்.
பங்கேற்ற மாணவர்கள், மேக்ரமே (கயிற்றுப் பின்னல்) கைத்தொழில், அரசுத் திட்டங்கள் மற்றும் முயற்சிகளைப் பயன்படுத்தி ஒரு வணிக வாய்ப்பாக வளர்த்தெடுக்கக்கூடிய திறன் உடையது என்பதை அறிந்துகொண்டனர்.












