தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான கலைப் போட்டி : திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான கலைப் போட்டி :
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன்

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி கணிதத் துறை, பவள விழா ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 12.02.2026 அன்று ‘Math Myst 2026’ எனும் கல்லூரிகளுக்கிடையேயான கலைப் போட்டிகளை நடத்தியது.

இந்த நிகழ்வில் பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து 118 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். வினாடி வினா, மைம், ஆய்வுக்கட்டுரை வழங்கல் உள்ளிட்ட 9 போட்டிகள் நடைபெற்றன. கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.

நிறைவு விழாவில் திருச்சிலுவை மனையியல்கல்லூரி முதல்வர் அருட்சகோதரி டாக்டர். சிஸ்டர் ரூபா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் டாக்டர். வீரபாகு விழாவை தலைமை தாங்கி, தலைமை விருந்தினருடன் சேர்ந்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

கணிதத் துறைத் தலைவர் டாக்டர். மீனாட்சி சுந்தரம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஜாக்சன் மற்றும் கணிதத் துறை பேராசிரியர்கள் அனைவரும் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.