தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் குலபதி ஏ.பி.சி.வீரபாகு நினைவு நாள் மற்றும் வ.உ.சி.இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற்றது !

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் குலபதி ஏ.பி.சி.வீரபாகு நினைவு நாள் மற்றும் வ.உ.சி.இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற்றது !

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் குலபதி ஏ.பி.சி.வீரபாகு அவர்களின் 44ம் ஆண்டு நினைவுவிழாவும், வ.உ.சி.இலக்கிய மன்ற தொடக்கவிழாவும் நடைபெற்றது

நேற்று காலையில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தில் குலபதி ஏ.பி.சி.வீரபாகு திரு உருவ படத்திற்கு ஆசிரிய பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

குறுவட்ட அளவிளான கபடி, வளையப் பந்து,தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற 22 மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் செயலர் ஏ.பி.சி.வீ.சண்முகம் சார்பில் கைக்கடிகாரங்களை முதுகலை ஆசிரியர் ஐசையா வழங்கினார்கள்.

மாலையில் நடைபெற்ற விழாவிற்கு பேச்சாளரும் வானொலி நிலைய நிகழ்ச்சி தொகுப்பாளரும், சமூக ஆர்வலருமான காமாட்சி தலைமையேற்று குலபதி ஏ.பி.சி.வீரபாகு நினைவு சொற்பொழிவு ஆற்றினார்.

நாவலாசிரியரும் அகில இந்திய வானொலி நிலைய அறிவிப்பாளருமான கண்ணம்மாள் ஸ்ரீதர் இலக்கிய சிந்தனைகள் என்ற தலைப்பில் இலக்கியமன்ற சிறப்பு சொற்பொழிவு ஆற்றி இலக்கிய மன்றத்தைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி வரவேற்புரையும் முதுகலை ஆசிரியை மரகதவள்ளி நன்றியுரையும் ஆற்றினார்கள்.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவை பட்டதாரி ஆசிரியை அந்தோணி ஆஸ்மின் தொகுத்து வழங்கினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர். ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.