கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சொட்டு மருந்து முகாம்
கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஊரணி தெரு ஆரம்ப சுகாதார மையத்தின் மூலம் வைட்டமின் ஏ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்றது.
பள்ளி முதல்வர் பிரபு முகாமை துவக்கி வைத்தார். செவிலியர் முத்துலட்சுமி குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.

இது பொதுவாக ஒன்பது மாதங்கள் முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளை விளக்காக கொண்டு தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை மூலமாக நடைபெறுகிறது
வைட்டமின் ஏ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சப்ளிமெண்ட் களை வழங்குகிறது. இது குழந்தைகள் பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது பார்வைக்கு அவசியமானது மற்றும் ஜெரோப்தால்மியா கார்னியல், ஜெரோசிஸ் மற்றும் இரவு குருட்டுத் தன்மை போன்ற கண் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது.

இம்முகாம் தூத்துக்குடி மாவட்டத்தில் 28.10.2025 தொடங்கி 01.11.2025 வரை நடைபெறுகிறது.
வைட்டமின் ஏ சொட்டு மருந்து சரியான மூளை வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் அனிதா, ஷர்மிளா தேவி, மாரியம்மாள், அன்னலட்சுமி, ஐஸ்வர்யம் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி அலுவலர்கள் செய்திருந்தனர்.













