கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது !

கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி 11.8.26 அன்று நடத்தப்பட்டது.

பேரணியை காவல் உதவி ஆய்வாளர் இதயத்துல்லா தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஜெயா ( மு. கூ. பொ ) வழிகாட்டுதலின்படி ஆங்கிலத்துறை தலைவர் முனைவர்.ராம்சங்கர் கலந்துகொண்டு முன்னிலை வகித்து பேசினார்.

தொடர்ந்து கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் முதல் நகராட்சி அலுவலக மணிக்கூண்டு வரை பேரணி சென்று திரும்பியது. இந்த ஊர்வலத்தில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. நிறைவாக உறுதிமொழிஎடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் மாவட்ட குழந்தைகள் நல குழு உறுப்பினர் நசீமா மற்றும் கடையநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் நந்தினி ,உதவி அலுவலர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் பேராசிரியைகள் பேபி மாலினி,சண்முகப்பிரியா, மணிமேகலை, சுஜா கலை நிகழ்ச்சி செல்வம் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் பால் மகேஷ், போதைப்பொருள் எதிர்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர்.குரு பிரசாத் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.













