தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி BFSI பயிற்சி திட்டத்தை நிறைவு செய்தது
மொத்தம் 150 மாணவர்கள் ஐந்து கல்வி நிறுவனங்களிலிருந்து கலந்து வஙகி நிதிச்சேவைகள் மற்றும் காப்பீடு ( BFSI – Banking Financial Services and Insurance ) பயிற்சி திட்டம் IITM Pravartak உடன் இணைந்து, டிஎம்பி பவுண்டேஷன் நிதியுதவியுடன், InfactPro Trainers மூலமாக நடைபெற்றது.
டிஎம்பி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாலி எஸ். நாயர், இரண்டாம் கட்ட பிஎப்எஸ்ஐ (BFSI) பயிற்சித் திட்டத்தையும் ஒரு மாபெரும் வேலைவாய்ப்பு கண்காட்சியையும் அறிவித்தார்.

டிஎம்பி பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முத்தையா, மாணவர்களை வங்கி துறையில் வேலைவாய்ப்புகளுக்காக ஊக்குவித்தார்.
நான்கு மாணவர்கள் சிறந்த செயல்திறன் விருதினைப் பெற்றனர்.

ஐஐடி எம் பர்வடக் நிறுவனத்தின் டாக்டர். மங்களா சுந்தர் கிருஷ்ணன் மற்றும் InfactPro நிறுவனத்தின் டாக்டர். பாலாஜி அய்யர், இந்த முயற்சியை பாராட்டி, மாணவர்கள் தங்களது அறிவை தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என்று ஊக்கமளித்தார்.













