தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் அட்மிஷன் நடைபெற இருக்கிறது

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் அட்மிஷன் நடைபெற இருக்கிறது

தென் தமிழகத்தின் மிகச் சிறந்த பாரம்பரியமிக்க கல்லூரியான தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் 2026 – 2027 ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற இருக்கிறது

1951 ல் குலபதி ஏ.பி.சி.வீரபாகு அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி தற்போது 75 வது பவளவிழாவை கொண்டாடி வருகிறது.

அனைவருக்கும் கல்வி,எளியவர்களும் கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் நாட்டில் குறைந்த கட்டணத்தில் கல்வியை பயிற்றுவிக்கும் கல்லூரிகளில் முன்னிலை வகிக்கிறது தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி.

நாட்டின் சுதந்திரத்திற்காக செக்கிழுத்து உயிர் தியாகம் செய்த வ.உ.சிதம்பரனாரின் பெயரில் இயங்கும் இக்கல்லூரியில் நுழைந்தாலே கோவிலில் இருப்பது போன்ற மனநிலை நம்மை உணரச் செய்யும்.

NAAC A++ கிரேடு
NIRF 2025 ல் தேசிய அளவில் 22 வது ரேங்கிங்.

திறமையான பேராசிரியர்கள், மாணவர்களுக்கு Computer Science with Artificial intelligence and Machine Learning போன்ற விருப்பமான பல்வேறு குரூப்கள் ( பாடங்கள்), ஸ்காலர்ஷிப், மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், PVC தளத்துடன் கூடிய உள் விளையாட்டு மைதானம், பல்வேறு வகையான விளையாட்டுகள், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஜப்பானிய மொழி கற்பித்தல், மிகப்பெரிய கலை நோக்கில் உள்ள ஆடிட்டோரியம் ( மன்றம்)  சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர்,  கேன்டீன் வசதி, பல்லாயிரக்கணக்கான புத்தகங்களை கொண்டு இயங்கும் படிப்பகம், படிக்கும் போதே வேலைவாய்ப்பிற்கான இன்டர்ன்ஷிப் மேலும் பல முக்கிய அம்சங்களுடன் உங்களை மேம்படுத்த அழைக்கிறது வ.உ.சிதம்பரம் கல்லூரி.

மேலும் UG & PG இளங்கலை மற்றும் முதுகலை வகுப்புகளில் சேர்க்கை நடைபெற இருக்கிறது.மேலும் விபரங்களூக்கு கீழ்க்கண்ட தளத்தை திறக்கவும்.👇👇👇👇👇

https//admission.voccollege.ac.in