தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம் : 9,09,397 மாணவ – மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர் : தூத்துக்குடி மாவட்டத்தில் 22,196 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம் :
9,09,397 மாணவ – மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர் : தூத்துக்குடி மாவட்டத்தில் 22,196 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதுகின்றனர்

தமிழகம் முழுதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நாளை மார்ச் 11 புதன்கிழமை தொடங்கி ஏப்ரல் மாதம் 6 ம் தேதி திங்கட்கிழமை வரை நடைபெற இருக்கிறது.தேர்வுகள் தேர்வு நாளில் காலை 10.00 மணிக்கு தொடங்கி மதியம் 01.15 மணி வரை நடைபெற இருக்கிறது.

இதற்காக தமிழக முழுவதும் 4,219 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 9,09,397 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத இருக்கின்றனர்.இதில் 12,467 பள்ளிகளில் இருந்து 8,82,806 மாணவ – மாணவிகளும் ,தனித் தேர்வர்கள் 26,196 பேரும் உள்ளடங்குவர். மேலும் 395 சிறைவாசிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கின்றனர்.

தேர்வு மையங்களை கண்காணிக்க பறக்கும் படை மற்றும் நிலையான பறக்கும் படை அதிகாரிகள் 4,954 பேரும், தேர்வறை கண்காணிப்பாளர்கள் 49,542 பேரும் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர் .இதில் மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக சொல்வதை எழுதும் ( Scriber )ஆசிரியர்கள் 12,292 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம்;

இந்நிலையில் நாளை தொடங்க உள்ள 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி கூறியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் – 89 , அரசு உதவி பெறும் பள்ளிகள் 126 மற்றும் மெட்ரிக் பள்ளிகள் – 85 என மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 300 பள்ளிகளில் இருந்து 22,196 மாணவ – மாணவியர்கள் தேர்வு எழுத இருக்கின்றனர்.இதில் தனித் தேர்வர்கள் 615 பேர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 323 பேர் ( அதிகரிக்கலாம் ) தேர்வு எழுத உள்ளனர்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 109 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 71 மையங்களும் ,கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 38 மையங்களும் உள்ளடங்கும்..

தேர்வு மையங்களை கண்காணிக்க நிலையான மற்றும் பறக்கும் படையினர் 165 பேர் ( தூத்துக்குடி – 72 , கோவில்பட்டி – 42 , திருச்செந்தூர் – 51 ) பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இ.ஆ.ப.அறிவுரைப்படி காற்றோட்டம் உள்ள போதுமான இடவசதி, சுத்தமான குடிநீர் மற்றும் தூய்மையான கழிப்பறை வசதிகள் உள்ளதா என்பதை உறுதி செய்திட அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.

குறிப்பு:

10 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 23 முதல் 28 வரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.