தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் “VOICE 2026” பழங்குடியினர் இலக்கிய விழா : தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி முதலிடத்தை பிடித்தது

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் “VOICE 2026” பழங்குடியினர் இலக்கிய விழா :
தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி முதலிடத்தை பிடித்தது

தூத்துக்குடி, ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் ‘VOICE 2026’ பழங்குடியினர் இலக்கிய விழா 12.02.2026 அன்று நடைபெற்றது.

கல்லூரியின் ஆங்கிலத் துறை முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப்பிரிவு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வு “VOICE 2026: Vibrations of Indigenous Cultural Expressions” என்ற தலைப்பில் பழங்குடியினர் இலக்கியமும் கலாச்சார வெளிப்பாடுகளும் முன்னிலைப்படுத்தப்பட்டு நிகழ்த்தப்பட்டது .

இந்த நிகழ்வில் 15-க்கும்மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த 190 மாணவிகள் பங்கேற்று மேடை மற்றும் மேடையற்ற போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

மாணவிகளுக்கு கலாச்சார பரிமாற்றத்திற்கான மேடையை ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி வழங்கியுள்ளது .

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆங்கிலத் துறை தலைவர் முனைவர்.மோனிகா ராம்ராஜ் தலைமையில் ஆங்கிலத் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

இப்போட்டிகளில் தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி மொத்த சாம்பியன் கோப்பையை வென்று முதலிடத்தைப் பெற்றது .தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் (தன்னாட்சி) கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றது.