கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினம் அனுசரிப்பு:

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மக்கள் தொகை தினம் அனுசரிப்பு:

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தேசிய நாட்டு நலப்பணி (NSS) Unit 236 சார்பில், உலக மக்கள் தொகை தினம் (17.07.2026) இன்று காலை 11.00 மணியளவில் கல்லூரி மினி அரங்கில் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர்.பிரபு முன்னிலை வகித்தார். தேசிய நாட்டு நலப்பணி அலுவலர் கீதாராணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அனைவரையும் வரவேற்றார்.

உலக மக்கள் தொகை தினத்தின் முக்கியத்துவம், குடும்ப நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், இவ்வாண்டின் கருப்பொருளான “இளைஞர்களின் நம்பிக்கைகளையும் இலட்சியங்களையும் இன்று மற்றும் எதிர்காலத்திற்காக நனவாக்குதல்” என்பதன் நோக்கம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உலக மக்கள் தொகை தின உறுதிமொழியை தமிழ் துறை பேராசிரியர் லில்லி வாசிக்க, மாணவ, மாணவிகள் அனைவரும் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டனர்.

மக்கள் தொகை தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தில் பரப்புதல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலைக் காத்தல், சுகாதாரமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் மற்றும் பொறுப்பான குடிமக்களாக செயல்படுதல் ஆகியவற்றை வலியுறுத்தி உறுதியேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர், மக்கள் தொகை என்பது எண்ணிக்கைகளின் வளர்ச்சி மட்டுமல்ல மனிதர்களின் உரிமைகள், சமத்துவம், கல்வி, ஆரோக்கியம் மற்றும் வளமான எதிர்காலத்துடன் தொடர்புடையது என்பதை வலியுறுத்தி, இளைஞர்களின் பங்களிப்பே நிலையான சமூக வளர்ச்சிக்கான அடித்தளம் எனக் குறிப்பிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தேசிய சேவைத் திட்ட தன்னார்வத் தொண்டர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.