இன்று மே 2 உலக டுனா மீன்கள் தினம்

                                                        இன்று மே 2 உலக டுனா மீன்கள் தினம்

மே 2 சூரை மீன்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் டுனா மீன் இனத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 2017 முதல் ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அதிக பட்சமாக சூரை மீன் பிடிக்கப்படுகிறது. உலகில் அதிகமாக விற்பனை செய்யப்படும் மீனும் இதுதான். இந்த சூரை மீனை பாதுகாக்கும் விதமாக ஐக்கிய நாடுகள் சபை சார்பில் மே 2 ம்தேதி உலக சூரை மீன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே 2 ம் தேதி உலக சூரை மீன்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சூரை மீன்கள் கலாச்சாரங்களில் ஒரு முக்கிய பகுதியாகும் அதை சிறந்த சமையலுக்கு விரும்பப்படும் மீன்களில் ஒன்றாகும். இந்திய சமையல் முதல் மேற்கத்திய சமையல் வரை சூரை மீன்கள் ஒவ்வொரு அசைவ உணவிலும் நட்சத்திரமாக விளங்குகிறது. இருப்பினும் சூரை மீன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

சூரை மீன் பிடிப்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் தற்போது தான் மீன்களின் எண்ணிக்கை குறைந்து வருவதை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். சூரை மீன்களின் எண்ணிக்கையை நிலையானதாக வைத்திருப்பதை உறுதி செய்ய நிலையான மீன்பிடி பழக்கவழக்கங்களை தேர்ந்தெடுப்பதை நினைவில் கொள்வது அவசியம். கடலில் பிடிக்கப்படும் மீன்களில் அதிகபட்சமாக காணப்படுவது சூரை மீன் அதாவது சுமார் 20 சதவீதம் வரை இவை இடம் பெறுகின்றன.உலகில் அதிக விற்பனை செய்யப்படும் மீனும் இதுதான்.இவற்றை பாதுகாக்கும் விதமாக ஐக்கிய நாடு சபை சார்பில் மே இரண்டாம் தேதி உலக சூரை மீன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

டுனாவில் இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
பிளாக்ஃபின் டுனா 3.5 அடி நீளம் இருக்கும்.
அல்பாகோர் டுனா 4.5 அடி நீளம் வரை இருக்கும்.
அட்லாண்டிக் புளூஃபின் டுனா சுமார் 15 அடி வரை வளரக்கூடியது.

டுனா மீன்கள் வேகமாக நீச்சல் அடிப்பவை, மேலும் அவை மணிக்கு 44 முதல் 62 மைல்கள் வரை வேகத்தை எட்டும்.
டுனா மீன்கள் தங்கள் தோலை உருமறைத்து, அவற்றைச் சுற்றியுள்ள கடலுடன் கலக்கச் செய்யும் திறனைக் கொண்டுள்ளன. சுற்றியுள்ள நீரை விட உடல் வெப்பநிலையை பராமரிக்கும் தனித்துவமான திறன் டுனாவுக்கு உண்டு.

சூரை மீன் சிற்றுண்டி இரவு நேர உணவாக பலரும் சாப்பிடுவதுண்டு. ஆனால் இந்த மீனில் பல்வேறு விதமான உடல் ஆரோக்கியத்தை ஊக்கப்படுத்தும் சத்துக்கள் நிறைவாக உள்ளன.சூரை மீன்களில் புரதச்சத்து அதிகமாக நிறைந்து இருப்பதுடன் ஒமேகா 3 அமிலம் வைட்டமின் டி உடலுக்கு தேவையான அடிப்படையான தாதுக்கள் ஏராளமாக உள்ளன.

சூறை மீன்களில் உள்ள புரதம் தசைகளின் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றன.

ஒமேகா 3 அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன் உடலில் அலர்ஜி ஏற்படுவதை தடுக்கிறது.உடலுக்கு அடிப்படை தேவையாக இருந்து வரும் வைட்டமின் டி சத்துக்கள் சூரை மீனில் இருப்பதால் எலும்புகளுக்கு ஆரோக்கியம் நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை வழங்குகிறது.