தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி மற்றும் சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து !

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி, கல்விசார் ஒத்துழைப்பு மற்றும் மாணவர்களின் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், தூத்துக்குடி சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) இன்று (10.8.2026) கையெழுத்திட்டது.

இந்தக் கூட்டாண்மையின் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தொழில் வழிகாட்டுதல், சான்றிதழ் படிப்புகள் மற்றும் அறிவுப் பரிமாற்ற நடவடிக்கைகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதே முக்கிய நோக்கமாகும். சக்தி விநாயகர் இந்து வித்யாலயா பள்ளி முதல்வர் சுப்புலட்சுமி, தாளாளர் விவேகானந்தன் ,செயலாளர் விவேகம் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் கல்வி மற்றும் மாணவர் மேம்பாட்டை மையமாகக் கொண்ட புதிய அடித்தளம் அமைக்கப்பட்டது.













