கல்வி பொருட்களுக்கு ஜிஎஸ்டி! வரி ரத்து : மத்திய அரசு அறிவிப்பு!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று 56வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டிருக்கிறது. அதில் கல்வி பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விளக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்படும் என்று கூறியிருந்தார். எனவே நேற்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
அதன்படி கல்வி பொருட்களான வரைபடங்கள், விளக்கப்படங்கள், உலக உருண்டைகள், பென்சில்கள், ஷார்ப்னர், க்ரேயன்கள், பேஸ்டல்கள், உடற்பயிற்சி புத்தகங்கள், குறிப்பேடுகள், ரப்பர்கள் போன்றவற்றிற்கு இதற்கு முன்னர் 5-12% வரை ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த முறை இவை அனைத்துக்கும் ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இந்த பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்.22ம் தேதி முதல் இந்த மாற்றம் அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.












