நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மேம்பாடு நிகழ்ச்சி துவக்க விழா !
நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி[தன்னாட்சி],தாளூர் .மாணவர்களின் தனித்திறன்களை அடையாளம் கண்டு மேம்படுத்தும் நோக்கில் திறன் மேம்பாடு (Skill Bank) திட்டத்தின் துவக்க விழா 30.07.2026 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 2.00 மணி அளவில் சாரங்கி அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் முனைவர்.ராஷித் காஸாலி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர்.பாலசண்முகதேவி தலைமை தாங்கி, திறன் மேம்பாட்டின் அவசியம், மாணவர்களின் தனித்திறன்களை வளர்ப்பதன் முக்கியத்துவம் மாணவர்களின் எதிர்கால வேலைவாய்ப்புகளில் திறன்களின் பங்கு குறித்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தொடர்ந்து வரவேற்புரை வழங்கப்பட்டு, திறன் மேம்பாடு திட்டத்தின் நோக்கங்கள், செயல்பாடுகள் மற்றும் மாணவர்களுக்கு கிடைக்கும் பயன்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
பின்னர், திறன் மேம்பாடு (Skill Bank) திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது. மாணவர்கள் தங்களது கல்வித் திறன்கள் மட்டுமல்லாமல் நடனம் ,இசை,கலை கைவினை,தலைமைத்துவம்,தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு திறன்களை பதிவு செய்து மாணவர்களின் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அனைத்து துறை மாணவர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இறுதியாக நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.












