தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் புத்தக வாசிப்பு திறன் மே்பாட்டு நிகழ்ச்சி

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் புத்தக வாசிப்பு திறன் மே்பாட்டு நிகழ்ச்சி

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியின் சார்பில் மாணவ ஆசிரியர்களின் புத்தக வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும்“வாசிப்பை நேசிப்போம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களான கல்வியியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர்.பிரேம லதா மற்றும் கல்வியியல் துறை துணைப்பேராசிரியர் முனைவர். சசிகலா ஆகியோர் 20.04.2026, திங்கள் கிழமையன்று, “வாசிப்பை நேசிப்போம்” மற்றும் “Let us Read and Reflect” என்ற தலைப்பில் இவ்வருடமும், புத்தக வாசிப்புத்திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

நிகழ்வின் சிறப்பு விருந்தினராக, கல்லூரி முதல்வர் முனைவர்.கனகராசு கலந்து கொண்டு, வாசிப்பின் முக்கியத்துவத்தை, குறிப்பாக, ஆசிரியர்களுக்கு எவ்வகையில் புத்தக வாசிப்பு மிகப் பயனுள்ளது என்பதை எடுத்துக் கூறியதோடு, தினமும் புத்தகம் வாசிப்பிற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றும், வாசித்த கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் மிக அவசியம் என்றும் எடுத்துரைத்தார்.

பேராசிரியர்கள் முனைவர்.பிரேம லதா மற்றும் முனைவர்.சசிகலா ஆகியோர், இளங்கலை கல்வியியல் இரண்டாம் ஆண்டு மாணவ ஆசிரியர்கள் அனைவருக்கும் பல்வேறு தலைப்பில் அமைந்த புத்தகங்களை, அன்பளிப்பாக அளித்தனர்.

கல்லூரி முதல்வர் அப்புத்தகங்களை 89 மாணவர்களுக்கும் வழங்கினார்.
மாணவ ஆசிரியர்கள் கல்லூரிக்கு நன்றி கூறியதோடு, புத்தக வாசிப்பினை தினமும் தொடர்வோம் என்று உறுதியளித்தனர்.