தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு திட்டம் பயிற்சி முகாம்

தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டு திட்டம் பயிற்சி முகாம்

தமிழ் நாடு அரசின்ய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையின் கீழ் இயங்கும் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளிக் கல்வித்துறை மற்றும் யுனிசெப் சார்பில் தூத்துக்குடி வஉசி
பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம் பயிற்சி முகாம் நடந்தது.

மாவட்ட திட்ட மேலாளர் சுவைதரன் வரவேற்றார். தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் டீன் பீட்டர் தேவதாஸ் வாழ்த்தி பேசினார்.  தூத்துக்குடி கோட்டாட்சியர் பிரபு, நெல்லை மாவட்ட திட்டமேலாளர் சிவபாரதி, பேராசிரியர் மணிமேகலை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

முகாம் வழிகாட்டிகளாக முனைவர்கள் மணிமேகலை, காயத்ரி, ஷைலா, சங்கரவடிவு. ஆனந்தி,அரவிந்த், பரமேஸ்வரி பவானி, ஜாக்சன் ஆகியோர் வழிநடத்தினர்.

2ம் நாள் முகாமில் எம்எஸ்எம்இ -டிஎப்ஓ உதவி இயக்குநர் சிமியோன், ஹப் ஒருங்கிணைப்பாளர் சிலாஸ் சர்குணம், காபிப் சிஇஓ அருண், எஸ்விஎம் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் முத்துராஜ்,  எட்டுடூ டெக்நோவேசன் நிறுவனர் முகமது
நவ்சத் ஷெரீப், யுனிசெப் பிரதிநிதி திட்ட தலைவர் பிரசன்னா சண்முகராஜ் ஆகியோர் மாணவர்களின் படைப்புகளை மதிப்பிட்டு‌ இறுதிப்போட்டிக்கு தகுதியான செயல்வடிவ மாதிரிகளை தேர்வு செய்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். ஹசன் பானு நன்றி கூறினார். முகாமில் தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 38 அணிகள் (185மாணவர்கள் மற்றும் 38  வழிகாட்டி ஆசிரியர்கள்) கலந்து கொண்டனர்.

இதில் வெற்றிபெறும் அணிகள் இறுதி சுற்றிற்கு தகுதிபெறும். தமிழகம் முழுவதும் இருந்து மாணவ- மாணவியர் கலந்து கொள்ளும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் 20 அணிகளுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.1,00,000 பரிசு வழங்கப்படும். 2ம் பரிசாக 20 அணிகளுக்கு தலா ரூ.50.000 மற்றும் 3ம் பரிசாக 20 அணிகளுக்கு தலா ரூ.25,000 வழங்
கப்படுகிறது.