12 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி

12 ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி

தமிழகமெங்கும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 2ஆம் தேதி திங்கட்கிழமை முதல் நடைபெற்று வருகிறது முதல் நாளான 2 ம் தேதி மொழிப்பாடமான தமிழ் பாட தேர்வு நடைபெற்றது.

அதனை அடுத்து கடந்த 5 ம் தேதி வியாழக்கிழமை மொழிப்பாடமான ஆங்கில பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது .

இன்று தேர்வின் 3 வது நாளான 9 ம் தேதி திங்கட்கிழமை வேதியியல் ( Chemistry )கணக்குப் பதிவியல் ( Accountancy ) மற்றும் புவியியல் ( Geography ) பாடத்திற்கான தேர்வுகள் நடைபெற்றது.

தூத்துக்குடி SAV மேல் நிலைப்பள்ளி உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவ – மாணவிகள் தேர்வுக்கான கேள்விகள் எளிதாக இருந்ததால் பதில்களை சரியாக எளிதியுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

ஒரு சில மாணவர்கள் மட்டும் வினாத்தாள் சிறிது கடினமாக இருந்ததாக கூறினார்கள்.

அடுத்து தேர்வின் 4 வது நாளான வரும் 13 ம் தேதி வெள்ளிக்கிழமை இயற்பியல் ( ( Physics). பொருளாதாரம் ( Economics) மற்றும் வேலை வாய்ப்பு திறன்கள் ( Employability Skills) தேர்வுகள் நடைபெற இருக்கிறது.