தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் போதைப் பொருள் இல்லா இளைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் போதைப் பொருள் இல்லா இளைஞர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலகு 68 மகளிர் பிரிவு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

“போதைப்பொருள் இல்லா இளைஞர்கள் – வலுவான தேசம் மற்றும் கல்வியே சிறுவர் திருமணத்தை முற்றிலும் முடிவுக்கு கொண்டு செல்லும்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் சொ. வீரபாகு அவர்கள் தலைமையில் நடைபெற்றது

சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி மூத்த சிவில் நீதிபதி சுபாஷிணி

தூத்துக்குடி நீதிமன்ற நீதிபதி சுமதி  சிறப்பு பேச்சாளர்களாக
தூத்துக்குடி,
குழந்தைகள் நலக்குழு சுவாமிநாதன், ஜேம்ஸ் அதிசயம் டிசிபிவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் பழக்கத்தின் தீய விளைவுகளை வலியுறுத்தி, சிறுவர் திருமணத்தை ஒழிக்க கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு, போதைப்பொருள் பழக்கத்திற்கும் சிறுவர் திருமணத்திற்கும் எதிரான விழிப்புணர்வு செய்திகளை விருந்தினர்களின் முன்னிலையில் பகிர்ந்தனர். அனைத்து மாணவர்களும் போதைப்பொருள் இல்லாத வாழ்வை வாழவும், சிறுவர் திருமணத்திற்கு எதிராக ஒன்றிணைந்து நிற்கவும் உறுதிமொழி எடுத்தனர்.

இந்நிகழ்ச்சி இளைஞர்களிடையே சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தும் வலுவான செய்தியைக் கொண்டு சென்றது.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியை நாட்டு நலப்பணித்திட்ட அலகு 68 மகளிர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர். ஆரோக்கிய செல்வ சுந்தரி ஏற்பாடு செய்தார்.