கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பநாடார் மேல்நிலைப்பள்ளியில் பள்ளித் தலைவர் மற்றும் செயலர் அய்யனார் அறிவுறுத்தலின்படி எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த நிகழ்வு பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.
உதவித்தலைமை ஆசிரியை சுஜாதா வரவேற்புரை ஆற்றினார். கோவில்பட்டி தலைமை மருத்துவமனை ஆலோசகர்
சாந்தா, WGO அதிகாரி முருகன், ரெனியல் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு எய்ட்ஸ் நோய் மற்றும் போதைப்பொருள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக மாணவர்கள் அனைவரும் போதை தடுப்பு மற்றும் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவர்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வாக இந்த நிகழ்ச்சி அமைந்தது.
பட்டதாரி ஆசிரியர் கார்த்திகேயன் நன்றியுரை ஆற்றினார்.













