கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச தாய்மொழி தினவிழா

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச தாய்மொழி தினவிழா

கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை முத்தமிழ் மன்றம் சார்பில் சர்வதேசத் தாய்மொழி தினவிழா 21.02.2026 அன்று கொண்டாடப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் தலைமையுரை ஆற்றினார்.

கோவில்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தனஜெயலதா சிறப்புரை வழங்கினார்.

“இன்றைய சூழலில் மொழியின் அவசியம்” எனும் தலைப்பில் அவர் ஆற்றிய உரையில், தமிழ்மொழி உணர்வு மிக்கது என்றும் “முன்னோர் எழுதிய நூலைப் படியுங்கள் நீங்களே நூலைப் படையுங்கள்” என்றும் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது முதல் இணையத்தில் தமிழ் வளர்ந்து வருவதைக் கூறியது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது.

தாய்மொழி தினவிழாவையொட்டி நடத்தப்பெற்ற இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் வரவேற்புரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினர் குறித்த அறிமுகவுரையினை வழங்கினார். உதவிப்பேராசிரியர் நன்றியுரை வழங்கினார்.

கல்லூரித் தாளாளர் அருணாச்சலம் வழிகாட்டுதலின்படி விழா ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.