இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1 கோடி மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்:
தமிழக அரசு செய்தி வெளியீடு
ரூ .660 கோடியில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1 கோடி மாணவர்கள் பயன் அடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் 2021ல் முதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டு குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வியை பெறவேண்டும் என பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்.

இந்த அடிப்படையில் முதல்வர் மு க ஸ்டாலின் எல்லோருக்கும் தரமான பள்ளி கல்வியை வழங்கிடும் நோக்கில் புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:
ரூ.658.17 கோடி நிதியில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி
ரூ.455.32 கோடியில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள்
ரூ.100.82 கோடியில் 28 தகைசால் பள்ளிகள்
ரூ.79.723 இடைநிலை ஆசிரியர்களுக்கு 81 கோடியில் கைக்கணினிகள்
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 25.08 லட்சம் மாணவர்கள் பயன் அடைந்துள்ளனர்.
வாசிப்பு இயக்கம் திட்டத்தில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் 44.50 லட்சம் மாணவர்கள் பயன்.
ரூ .352.42 கோடியில் 44 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதின் மூலம் சிறந்த தரமான பள்ளிக்கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது.












