6,540 அரசுப் பள்ளிகளில் இணையதள சேவை பணிகள் நடைபெறுகிறது :
தமிழக அரசு தகவல்
மாநில கல்விக் கொள்கையால் புதிய வரலாறு படைக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்த அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு.
கல்வியில் சமூக சமத்துவம், ஆழமாக வேரூன்றிய தமிழ்நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துதல்,எதிர்காலத்தை நோக்கிய ஒரு துணிச்சலான முன்னெடுப்பாக தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையானது புதியதாக வடிவமைக்கபட்டுள்ளது.

இந்தக் கொள்கையின் ஒவ்வொரு செயலும் மறு கட்டமைப்பும் புதுப்பித்தலுக்கான வழிமுறையை கவனமுடன் முன் வைக்கிறது.இது ஒரு எழுச்சிமிக்க சமத்துவமான மற்றும் குழந்தைகளை எதிர்காலத்துக்கு தயார் படுத்தும் சிறந்த கல்வி முறைக்கான ஒரு திட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இணைய வசதி மாநிலத்துக்கான பிரத்தியாக கல்விக் கொள்கையை யொட்டி பள்ளி கல்விக்கான ஏராளமான முன்னெடுப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் அரசு பள்ளிகளில் புகுத்தப்படுகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரை 28,067 அரசுப் பள்ளிகளுக்கு இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6,540 பள்ளிகளில் இனிய சேவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.












