தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்களுக்கு திருநெல்வேலி – நோவா கார்பன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி நிறைவு

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்களுக்கு திருநெல்வேலி – நோவா கார்பன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் பயிற்சி நிறைவு

வ. உ. சிதம்பரம் கல்லூரியின் வேதியியல் துறை மாணவர்கள் 28.07.2025 முதல் 3.8.2025 வரை நோவா கார்பன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் தங்களது ஒரு வார கால பயிற்சியை (Internship) நிறைவு செய்துள்ளனர்.

மூன்றாம் ஆண்டு வேதியியல் படிக்கும் மாணவிகள், அர்ச்சனா, பிரிந்தா, தனலட்சுமி, பிரான்ஷீபா மேரி ஜான்சி ஜெஃப்ரினா, கார்த்திகா, மரிசெல்வி, சண்முக பிரியா சுகன்யா ஆகியோர், 28 ஜூலை 2025 முதல் 3 ஆகஸ்ட் 2025 வரை, நோவா கார்பன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் நான்காவது குழு தங்களின் பயிற்சியை (Internship) நிறைவு செய்துள்ளனர்.

அவர்கள் பல்வேறு பணிகள் மற்றும் பொறுப்புகளில் ஈடுபட்டதுடன், தங்களின் திறமைகளையும், புதிய திறன்களை அறிந்து கொள்ளும் சுயமுனைப்பையும் வெளிப்படுத்தினர்.

மாணவர் சமூகத்தின் நலனுக்காக அளித்த முழு ஒத்துழைப்பிற்கும், அக்கறைக்கும் உதவிய நோவா கார்பன்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனி திருநெல்வேலியின் நிர்வாக இயக்குனர் – அன்டனி தோமஸ், பொது மேலாளர் – வசந்த பிரபு மற்றும் மனிதவள நிர்வாகி – தனபால் தனா ஆகியோருக்கு தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு தெரிவித்தார்.