தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் “உலகத் தாய்மொழி தினம்” கொண்டாட்டம்
தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் 21.02.2026 அன்று தமிழ் துறையின், முத்தமிழ் இலக்கியப் பேரவை சார்பாக “உலகத் தாய்மொழி தின விழா”-2026 கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக, தமிழ்ப்பல்கலைக்கழக, அயல்நாட்டுத் தமிழ்த்துறையின் தலைவர் முனைவர்.
குறிஞ்சி வேந்தன் இணையவழி தமிழ் மொழியின் அயல்நாட்டுப் பரவல், வேலைவாய்ப்பு குறித்து சிறப்புரையாற்றினார்.இராஜராஜன், பழம்பொருள் சேகரிப்பாளர், பழம்பொருள் பாதுகாப்பின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.

இவ்விழாவில் வரவேற்புரையை முனைவர்.பிரேமலதா, இணைப் பேராசிரியர் கல்வியியல் துறை வழங்கினார். விழாவின் நோக்கவுரையை முனைவர்.பாபு, உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை வழங்கினார். தலைமையுரையை கல்லூரி முதல்வர் முனைவர்.த.கனகராஜ் வழங்கினார்.
கவிதா, உதவிப் பேராசிரியர், பொருளறிவியல் துறை சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து உரைநிகழ்த்தினார்.

பின் கட்டுரைப் போட்டி, கூத்துப்பட்டறையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னர் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தமிழ் நடைப் பேரணி நிகழ்த்தப்பட்ட காப்பியச் செய்யுள்கள் வாசிக்கப்பட்டன. காலை 10.00 மணிக்கு தொடங்கிய நிகழ்வில் தமிழ் மொழி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இறுதியாக, கணிதத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.தவசுபா நன்றியுரை வழங்கினார். மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.













