புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கற்போர்கள் அடிப்படை எழுத்தறிவு தேர்வு – தூத்துக்குடியில் நடைபெற்றது

புதிய பாரத எழுத்தறிவு திட்டம் கற்போர்கள் அடிப்படை எழுத்தறிவு தேர்வு – தூத்துக்குடியில் நடைபெற்றது

தமிழகம் முழுவதும் அடிப்படை எழுத்தறிவு இல்லாத 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கற்போர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது.

தூத்துக்குடி நகர்ப்புறம் சார்பாக இன்று தூத்துக்குடி கால்டுவெல் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தேர்வு மையத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அடிப்படை எழுத்தறிவு இல்லாத 11 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு மையத்தை வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி,மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் மற்றும்
வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் வனிதா பார்வையிட்டனர்.

தேர்வுக்கான ஏற்பாடுகளை
தன்னார்வலர் சபிதா கலைமணி மற்றும் கால்டுவெல் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை ( பொறுப்பு ) மார்ஜின் செய்திருந்தனர்.

மேலும் தூத்துக்குடி நகர்ப்புறம் ஒன்றியத்திற்குட்பட்ட 3 மையத்தில் மொத்தம் 30 பேர்கள் இன்று (15.06.2025) இத் தேர்வினை எழுதினர்.