சோழபுரம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா

சோழபுரம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் சோழபுரம் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா 13.1.2026 அன்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் தங்கப்பாண்டியன், கல்லூரி முதல்வர் பாண்டிச்செல்வி, கல்லூரி இயக்குனர் டாக்டர். பிரேமலதா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை கொண்டாடினார்கள்.

இதனை முன்னிட்டு மாணவர்களுக்கு கைப்பந்து, கபாடி, மற்றும் கேரம் போன்ற போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழர் திருநாள் மகத்துவத்தை கல்லூரி இயக்குனர் மாணவர்களுக்கு எடுதுதுரைத்து சிறப்புரை ஆற்றினார்.