அரசு பள்ளி மாணவர்களுடன் காணொளி மூலம் பேச முதல்வர் திட்டம்

அரசு பள்ளி மாணவர்களுடன் காணொளி மூலம் பேச முதல்வர் திட்டம்

அரசு பள்ளி மாணவர்களுடன் ஹைடெக் லேப் வழியாக வீடியோ கான்பரன்சில் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடும் திட்டம் துவக்கவுள்ள நிலையில், இணையசேவை உட்பட ஹைடெக் லேப்களில் நிலவும் பிரச்னைகள் சவாலாக உள்ளது என தலைமையாசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஹைடெக் லேப் வசதியுள்ள 6,329 உயர்நிலை மற்றும், மேல்நிலை பள்ளி மாணவர்களுடன் ஒரே நேரத்தில் முதல்வர் பேசும் நிகழ்ச்சியை, ஜூன் 15ல் நடத்த கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக பள்ளிகளில் உள்ள லேப்களை தயார் நிலையில் வைக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஹை டெக் லேப்களுக்கு இணையசேவை கிடைக்காதது, இணைய சேவை கட்டணத்தை அரசு வழங்காதது, இணைய இணைப்பு இல்லாதது போன்ற பிரச்னைகள் உள்ள நிலையில் லேப்’களை தயார்படுத்துவதில் ஆசிரியர்களுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றால் பிரச்னைகளை சரிசெய்து ஜூன் 15ல் லேப்கள் நல்ல முறையில் செயல்பட ஏற்பாடு செய்யுங்கள் என எச்சரிக்கின்றனர்.

முதல்வர் பங்கேற்கும் இதுபோன்ற திட்டத்திலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டும் நடவடிக்கையால் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்,