தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி மற்றும் அர்விந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம்

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி மற்றும் அர்விந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம்

என். எல். சி.தமிழ்நாடு பவர் லிமிடெட் தூத்துக்குடி பொறுப்புணர்வு திட்டத்தின் உதவியுடன் தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை பிப்ரவரி 8 – 2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தூத்துக்குடி, அண்ணாநகர் தங்கம் நடுநிலைப்பள்ளயில் காலை 9 மணி அளவில் நடத்தியது.

முகாம் என்.எல்.சி லிமிடெட் CEO அனந்தராமானுஜம் முன்னிலையில் துவங்கப்பட்டது.

ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட (அணி எண்கள் 47 &57) ஒருங்கிணைப்பாளர்களான வேதியியல் துறை பேராசிரியர் ஸ்டெல்லா பாக்கியம் மற்றும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் புஷ்பகவல்லி ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு வழி‌ நடத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சி நடப்பதற்கு உறுதுணையாக ஏ.பி.சி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் 20 பேர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்தனர்.

இந்த இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமில் ஏறத்தாழ 256 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். கண் பரிசோதனை செய்து கொண்ட பொதுமக்கள் 54 பேர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டன.111 பேருக்கு கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. மேலும் கண் அறுவை சிகிச்சைக்காக 8 பேருக்கு அரவிந்த் கண் மருத்துவ மனையில் வைத்து இலவசமாக சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.