தூத்துக்குடி டி. எம். என். எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழச்சியை டி. எம். என். எஸ். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேக்ஷன் பள்ளியில் தாளாளர் மற்றும் செயலாளர் எஸ். ஆர். எஸ். உமரிஷங்கர் வழிகாட்டுதலின் பெயரில் 06.06.2025 அன்று போதை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ( S.S.I.)மகேஸ்வரி மாணவர்களை கருவியாக வைத்து வஸ்துக்களை எவ்வாறு கடத்துகிறார்கள், மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும், அவற்றிற்கு அடிமையாகக் கூடாது என்றும் விளக்கிக் கூறினார்.
நிகழ்சியில் சிவச்செல்வமணி மற்றும் ஜான்சன் ஆகியோர் உடனிருந்தனர்.
மாணவர்களுக்கு இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகும்.












