நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கல்லூரிகளுக்கிடையிலான தடகளப்போட்டி:
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரிக்கு பதக்கம்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான வருடாந்திர தடகளப் போட்டிகள் அக்டோபர் 29 முதல் 31 வரை பாளையங்கோட்டை, அண்ணா மைதானத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி, வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் 3 தங்கப் பதக்கங்களும் 2 வெண்கலப் பதக்கங்களும் வென்று சிறப்பித்தனர். மேலும், ஆண்கள் பிரிவில் 25 புள்ளிகள் பெற்று, வ.உ.சி கல்லூரி அணி 6ஆம் இடத்தை பெற்றது.
பதக்கம் பெற்றோர் விபரம்
1.மாணிக்கதுரை – தங்கம் (1500 மீட்டர் ஓட்டம்), வெண்கலம் (5000 மீட்டர் ஓட்டம்)
2. பால்ராஜ் – தங்கம் (போல் வால்ட்)
3. ஜோயல் – வெண்கலம் (உயரம் தாண்டுதல்)
4. சஹனா – – தங்கம் (உயரம் தாண்டுதல் – பெண்கள்)












