தூத்துக்குடி படித்த பள்ளிக்கும், படிக்கும் மாணவர்களுக்கும் உதவி செய்த முன்னாள் மாணவர்கள்

தூத்துக்குடி படித்த பள்ளிக்கும், படிக்கும் மாணவர்களுக்கும் உதவி செய்த முன்னாள் மாணவர்கள்

நேற்றைய மாணவர்கள்… இன்றைய வழிகாட்டிகள்… நாளைய சமூகத்தின் நம்பிக்கை மற்றும் எடுத்துக்காட்டு  என்ற நோக்கில் தாங்கள் பயின்ற, தூத்துக்குடி – SAV மேல்நிலைப் பள்ளியின் பழைய மாணவர்கள் சங்கம் சார்பாக பள்ளி வளாகம் சுத்தம் செய்யும் சிறப்பு சமூகப் பணியை முன்னெடுத்து, தற்போதய பள்ளி NSS மாணவர்களின் துணையுடன், பள்ளி சூழலை சுத்தமாகவும் அழகாகவும் மாற்றினார்கள்.

மேலும், இந்த ஆண்டு பொது தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன், மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு படிப்பின்போது சிற்றுண்டி வழங்கும் உயர்ந்த நோக்கத்தில், ரூ.30,000 மதிப்புள்ள காசோலையை பள்ளி நிர்வாகத்திடம் 77 வது குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது பழைய மாணவர்கள் சங்கம் நிர்வாகிகள்
சந்தானகிரிஷ்ணன்,  மோகன் மற்றும் ராமசந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்த சேவை, மாணவர்களின் உடல் மற்றும் மன உற்சாகத்தை உயர்த்துவதோடு,
“நாம் படிக்கும் பள்ளி, நம் பொறுப்பு”  என்ற உணர்வை சமூகத்தில் பரப்புகிறது. பழைய மாணவர்களின் இந்த அர்ப்பணிப்பு, இளம் தலைமுறைக்கு ஊக்கதையும் , சமூகப் பொறுப்புணர்வையும் அதிகரிக்கும் ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

முன்னாள் மாணவர்களின் அர்பணிப்பு செயலுக்கு பள்ளியின் செயலாளர், வழக்கறிஞர் சோர்ணலதா குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது நன்றி பாராட்டினார்.