தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங் 3-ம் சுற்றுக்கு எம்.பி.பி.எஸ் இடங்கள் 1518 : பி. டி. எஸ். இடங்கள் 641 காலியாக உள்ளது.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங் 3-ம் சுற்றுக்கு எம்.பி.பி.எஸ் இடங்கள் 1518 :
பி. டி. எஸ். இடங்கள் 641 காலியாக உள்ளது.

தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வு 3 ஆம் சுற்றுக்கான திருத்தப்பட்ட காலியிடங்களின் பட்டியல் வெளியிப்பட்டுள்ளது. அதன்படி எம்.பி.பி.எஸ் இடங்கள் 1518 ஆக உயர்வு, பி.டி.எஸ் படிப்பில் 641 இடங்கள் காலியாக உள்ளன.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் மூன்றாம் சுற்றுக்கு திருத்தப்பட்ட காலியிடங்களின் பட்டியலின்படி 1518 எம்.பி.பி.எஸ் இடங்களும் 641 பி.டி.எஸ் இடங்களும் காலியாக உள்ளதாக கவுன்சலிங் கமிட்டி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. தற்போது மூன்றாம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது.

இந்தநிலையில், மூன்றாம் சுற்றுக்கான காலியிடங்களின் விபரம் வியாழக்கிழமை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1118 எம்.பி.பி.எஸ் இடங்கள் மற்றும் 631 பி.டி.எஸ் இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், கவுன்சலிங் கமிட்டி வெள்ளிக்கிழமை திருத்தப்பட்ட காலியிடங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட காலியிடங்களின் பட்டியல் குறித்து மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் விளக்கியுள்ளார்.

திருத்தப்பட்ட பட்டியலின்படி, 7.5% அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் மொத்தம் 30 எம்.பி.பி.எஸ் இடங்களும், 10 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன. இதில் எம்.பி.பி.எஸ் இடங்கள் தனியார் நிறுவனங்களில் மட்டுமே உள்ளன. அதேநேரம் பி.டி.எஸ் இடங்களில் 2 இடங்கள் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ளன.

92.5% பொது பிரிவினருக்கான ஒதுக்கீட்டை பொறுத்தவரை, 31 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 118 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியில் 2 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. 21 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 349 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டில் 608 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன. தனியார் பல்கலைக்கழகங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 163 எம்.பி.பி.எஸ் இடங்களும், மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டில் 248 எம்.பி.பி.எஸ் இடங்களும் உள்ளன. மொத்தமாக 1488 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளன.

பி.டி.எஸ் இடங்களை பொறுத்தவரை அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 53 இடங்கள் உள்ளன. 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 417 பி.டி.எஸ் இடங்களும் மேனேஜ்மெண்ட் ஒதுக்கீட்டில் 161 பி.டி.எஸ் இடங்களும் உள்ளன. மொத்தமாக 641 பி.டி.எஸ் இடங்கள் உள்ளன.

ஒட்டுமொத்தமாக 1518 எம்.பி.பி.எஸ் இடங்களும், 641 பி.டி.எஸ் இடங்களும் 3 ஆம் சுற்று கலந்தாய்வுக்கு உள்ளன. இந்தச் சுற்றில் நிரம்பாத சிறுபான்மையினர் இடங்கள் மற்றும் என்.ஆர்.ஐ இடங்கள் இறுதி சுற்று கலந்தாய்வில் பொது பிரிவுக்கு மாற்றப்படும்.

3 ஆம் சுற்றில் கலந்துக் கொள்ளும் மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் அல்லது கல்லூரியில் சேராவிட்டாலும் அடுத்த சுற்றில் கலந்து கொள்ள முடியாது.