தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் கல்லூரி செயலர் அருட்தந்தை ராஜதேவன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர். பிரபு, கல்வி ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை முனைவர் ரோசாரியோ முன்னிலை வகித்தார்கள்.

மாணவ மாணவிகளுக்கு பாரம்பரியத்தை நினைவூட்டும் விதமாக பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மாணவ, மாணவிகள் தங்கள் துறைவாரியாக பொங்கலிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் தமிழ் துறை மற்றும் கரிசல் தமிழ் மாணவர் சங்கம் சார்பாக, பொங்கல் பண்டிகை என்பது பண்பாட்டின் பெருமிதமே, பகட்டான ஆரவாரமே என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

பட்டிமன்ற நடுவராக கோவில்பட்டியை சேர்ந்த வரகவி நல்லாசிரியர் முருகேசன். சிறப்புரையாற்றினார்.

பண்பாட்டின் பெருமிதமே என்ற தலைப்பில் கற்பகவின்ஸி, ரவி ராஜன், மரிய சுவேதா, பகட்டான ஆரவாரமே, என்ற தலைப்பில் பூமிகா, அருள்ஜோதி, ஜெனிபர். ஆகிய மாணவ மாணவிகள் வாதாடினர். இறுதியாக நடுவர் மாணவ மாணவிகளின் விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு பொங்கல் பண்டிகை என்பது பண்பாட்டின் பெருமிதமே என தீர்ப்பு வழங்கினார்.

இந்த பொங்கல் விழாவில் அருட்தந்தையர்கள் அலெக்சாண்டர் சுரேஷ், அருள்ராஜ், செல்வராஜ் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ் துறை பேராசிரியர்கள் தமிழரசி, தெய்வ ரத்தினா, மகேஷ் குமார், செல்வராஜ், அனிதா, மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.