தூத்துக்குடி வ. உ. சி. கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தூத்துக்குடி வ. உ. சி. கல்வியியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் 09.01.2026 அன்று முத்தமிழ் இலக்கியப் பேரவை, கவின் கலைக்கழகம் மற்றும் மாணவர் பேரவையின் சார்பாக காலை 09.30 மணியளவில் கல்லூரி அலுவகத்திலும், மதியம் 12.30 மணியிலிருந்து துறை வாரியாகவும் பொங்கல் விழா நடைபெற்றது.

நிகழ்வில் ஆசிரிய மாணவர்களும், பேராசிரியர்களும், வ.உ.சி.கல்விக் கழக சிறப்புப்பள்ளி மாணவர்களும் மற்றும் சிறப்புப்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து பொங்கலிட்டு சமத்துவப் பொங்கலைக் கொண்டாடினர்.

கல்லூரி முதல்வர் முனைவர்.கனகராஜ் தலைமையில் நிகழ்ந்த இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நாட்டுப்புறக் கலைஞர் திருமாலப்பன் சிறப்பு செய்தார்.

விழாவில் பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், கும்மியாட்டம், ஒயிலாட்டம், பறையிசை மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் அனைவரும் மகிழ்வுடன் இந்த சமத்துவப் பொங்கலைக் கொண்டாடினர்.
மாலை 04.30 மணியளவில் பொங்கல் விழா நிறைவடைந்தது.