தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் உலக தண்ணீர் தினம்

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியில் உலக தண்ணீர் தினம்

தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்கமும், செஞ்சுருள் கழகம் இணைந்து 21.03.26 அன்று உலக தண்ணீர் தினம் (22.03.26) கல்லூரியின் பொன்விழா அரங்கில் நடைபெற்றது.

கல்லூரி பாடல் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது.

விழாவின் சிறப்பு விருந்தினராக வெம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் முதுகலை இயற்பியல் பட்டதாரி ஆசிரியர் கணேசன் கலந்துகொண்டு இவ்வாண்டு உலக தண்ணீர் தின கருப்பொருளான “தண்ணீர் மற்றும் பாலினம்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அவர் தனது கருத்துறையில், தண்ணீர் மற்றும் நமது சமூக கலாச்சாரத்துக்கு இடையேயான பிணைப்பு குறித்து தக்க எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியதோடு, ஒரு ஆசிரியராக நீர் மேலாண்மையில் நமது கடமை குறித்து விளக்கினார்.

முன்னதாக கல்லூரியின் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளரும் கல்வியியல் துறை இணை பேராசிரியருமான முனைவர் பிரேமலதா நிகழ்ச்சியின் முன்னுரை மற்றும் நிகழ்ச்சி முக்கியத்துவம் குறித்த நோக்க உரையை வழங்கினார்.

தொடர்ந்து கல்லூரியின் செஞ்சுருள் கழகத்தின் ஒருங்கிணைப்பாளரும் கல்வியியல் துணை பேராசிரியருமான முனைவர் சசிகலா தண்ணீர் சேமிப்பு குறித்த உறுதி மொழியை வழங்க மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் உறுதிமொழி ஏற்றனர்.

அடுத்ததாக மாணவ ஆசிரியர்கள் தண்ணீர் சிக்கனம் குறித்த பாடல், தண்ணீர் மாசுபாடு குறித்த விழிப்புணர்வு குறும்படம் மற்றும் தண்ணீர் ஆதாரங்கள் அதைப் பாழ் படுத்தும் மனிதர்கள் மீதான வழக்கினை நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்காடு மன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

நிறைவாக கல்லூரியின் உயரறிவியியல் துறைப் பேராசிரியர் ரூபினா தனசுதா நிறைவுறை வழங்க நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.

உலக தண்ணீர் தினம் அனுசரிப்பு நிகழ்வுகளை கல்லூரி முதல்வர் முனைவர். கனகராஜ் வழிகாட்டுதலின்படி,கல்லூரியின் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரேமலதா மற்றும் கல்லூரியின் செஞ்சுருள் கழக ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சசிகலா ஆகியோரும் செய்திருந்தனர.