கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 43-வது ஆண்டு விழா
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 43-வது ஆண்டு விழா 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது.
பள்ளிகளின் செயல்பாடு, மாணவர்களின் சிறப்பம்சங்களைப் பெற்றோருக்கு எடுத்துரைக்கும் வகையில் ஆண்டு விழா அமைந்தது.

இவ்விழாவிற்கு கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார் மற்றும் உறுப்பினர் ராஜேந்திர பிரசாத், தர்மகர்த்தா மாரியப்பன் ஆகியோர் விழாவைச் சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மேலாண்மை இயக்குனர் வின்சென்ட் மேனசேரி தேவசி, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி துணைத் தலைவர் ரமேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் துறைத் தலைவர் வசந்தன், கோவில்பட்டி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி கிளைகளின் மேலாளர்கள் அறுமுகக்கனி மற்றும் தகலிஷ் குமார் கலந்துகொண்டனர்.

பள்ளிச் செயலாளர் அட்வகேட் செல்வம், பொருளாளர் பாஸ்கரன், பள்ளிக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், கண்ணன்,செல்வம், பொன்ராமலிங்கம், ரவிமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி முதல்வர் பிரபு, பள்ளியின் ஆண்டு அறிக்கையில் மாணவர்களின் சாதனைகள் மற்றும் ஆசிரியர்களின் சாதனைகளையும் எடுத்துரைத்தார்.
இவ்விழாவில் கடந்த கல்வியாண்டில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர் நற்பண்புகளையும், நன்னடத்தையையும் மாணவர்களுக்கு ஊட்டுவதுதான் சிறந்த பள்ளியின் அடையாளம் அந்த வகையில் விழாவில் அழகாக வடிவம் கொடுத்து மாணவர்களுக்குச் சிறப்பான பயிற்சி அளித்து திறமையை வெளிப்படுத்தும் விதமாக நாட்டுப்புறப் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள், சுற்றுச்சூழல் குறித்த பாடல்கள், மாணவர்கள் வாசித்த கதைகளை மேடையில் வெளிப்படுத்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகம், சொற்போர் மற்றும் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

அனைத்து குழந்தைகளுக்கும், சிறப்பாக பணியாற்றிய அனைத்து ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ம் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பரிசளித்து பாராட்டினர்
விழாவில் உறவின்முறை செயற்குழு உறுப்பினர்கள், பள்ளி, கல்லூரிச் செயலர்கள், பொருளாளர்கள், உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் பெற்றோர்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாகத் திகழும் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.













