தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் IT துறையில் வேலை வாய்ப்புகளுடன் கூடிய பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் IT துறையில் வேலை வாய்ப்புகளுடன் கூடிய பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

2025 ஜூலை 22ஆம் நாள் ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் அனைத்து பிரிவு மாணவியருக்கும் IT துறையில் அனைத்து விதமான பிரிவுகளிலும் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றிய வழிகாட்டுதல் நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் ரூபா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக POSTULATE நிறுவனத் தலைவர் முனைவர் ஜான்சன் துரைராஜ் கலந்துகொண்டு IT துறையில் துறையின் பிரிவுகளான Mobile App Development, Web App Development மற்றும் தற்போது அதீத வரவேற்பை பெற்றுள்ள செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய தகவல்களையும் அத்தகைய பிரிவுகளில் வேலை வாய்ப்பைப் பெற கற்க வேண்டிய தொழில்நுட்பங்களை பற்றியும் விளக்கி பேசினார்.
மேலும் அத்தகைய தொழில்நுட்பத்திறன்களை வளர்க்க மேற்கொள்ள வேண்டிய பயிற்சிகளின் அவசியத்தையும் வலியுறுத்தி விளக்கம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து IT துறையில் வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி வகுப்புகளை பற்றிய அறிவிப்பும், இக்கூடுதல் பயிற்சி வகுப்புகளில் அனைத்து தரப்பு மாணவ மாணவியரும், வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன்பெரலாம் என்பதும் தெரியப்படுத்தப்பட்டது.

மேலும் இத்தகைய வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வகுப்புகளில் சேர https://hchsc.edu.in என்ற இணையதள பக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.