துணைவேந்தர்கள் நியமனம் :
நீதிமன்றமே நேரடியாக தலையிட நேரிடும் :
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை
கேரளாவில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்கும் விவகாரத்தில் நீதிமன்றம் நேரடியாக தலையிடும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளத்தில் ஏபிஜே அப்துல் கலாம் தொழில் நுட்ப பல்கலைக்கழகம், எண்ம அறிவியல் பல்கலைக்கழகம் ஆகியற்றிற்கு துணைவேந்தர்களை நியமிக்கும் தேடுதல் குழு தலைவராக முன்னாள் நீதிபதி சுதா சூத் துளியா வை உச்சநீதிமன்றம் நியமித்து இருந்தது.
இந்த இரு பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை முன்னாள் நீதிபதி சுதா சூத் துளியா பரிந்துரைத்தும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழந்தது.
இது தொடர்பாக கேரளா அரசு தாக்குதல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விசாரித்தனர்.
அப்போது இந்த விவகாரத்தில் முதலமைச்சரும், ஆளுநரும் உடன்படா விட்டால் உச்சநீதிமன்றமே துணைவேந்தர்களை நியமிக்கும் என்று நீதிபதிகள் அதிரடி கருத்தை பதிவு செய்தனர்.












