துடிசியா ( TIE ) 6 வது தொழில் கண்காட்சி :
தூத்துக்குடியில் நாளை துவங்குகிறது.
ஆகஸ்ட் 8,9 மற்றும் 10 தேதிகளில்

தூத்துக்குடியில் சிறு, குறு தொழில் சங்கம் ( துடிசியா ) நடத்தும் 2025 ம் ஆண்டு தொழில் கண்காட்சி நாளை தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது.
இது குறித்து துடிசியா தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
தூத்துக்குடி மாவட்ட சிறு, குறு தொழில் சங்கம் 3 வருடங்களுக்கு ஒருமுறை தூத்துக்குடியில் தொழிற் கண்காட்சி நடத்தி வருகிறது. தென்கோடியில் அமைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய தொழில் நுட்பங்களை கொண்டு சேர்க்கவும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் இக்கண்காட்சி பயனுள்ளதாக உள்ளது. இந்த வருடம் ஆகஸ்டு மாதம் 8, 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தூத்துக்குடி ஏ.வி.எம்.கமலவேல் மஹாலில் வைத்து துடிசியா தொழிற் கண்காட்சி(TIE-2025) 6வது முறையாக நடத்துகிறது.
இக்கண்காட்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் கனரக தொழிற்சாலைகள் பங்கு பெற்று, தங்களின் தொழிற்சாலைகளில் தயாரிக்கும் பொருட்களை காட்சிப்படுத்தவுள்ளனர். மேலும் வாங்குவோர் விற்போர் கருத்தரங்கு, புதிய தொழில்முனைவோருக்கான start up programme மற்றும் ஏற்றுமதி இறுக்குமதியாளருக்கான கருத்தரங்குகள் இடம்பெறவுள்ளன. வாங்குவோர் விற்போர் கருத்தரங்கில் வ.உ.சி துறைமுகம், கூடங்குளம் அனுமின் நிலையம், ISRO, DCW, SPIC, NTPL, TMB மற்றும் பல நிறுவனங்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர். அரசு துறைகளான SIDCO, SIDBI, MSME, TIIC, DIC போன்றவர்களும் இந்தியா முழுவதிலும் இருந்து பல தொழிற்சாலைகள் இதில் கலந்துக்கொள்கின்றனர்.

நமது மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முன்னோடி மாவட்டமாக திகழ, இக்கண்காட்சி பெரிதும் உதவுகிறது.
இக்கண்காட்சியின் துவக்க விழாவானது ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது அதில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர். கனிமொழி கருணாநிதி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர். அன்பரசன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர். அனிதா ராதாகிருக்ஷ்ணன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி மற்றம் ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக்கொள்கின்றனர்.
கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம். மேலும் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள் தங்களது மாணவர்களை கண்காட்சிக்கு அழைத்து வந்து அவர்கள் பயன்பெற அழைக்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு கீழ்க்காணும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும் –
👇👇👇👇👇
94899 81646













