திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தூத்துக்குடி டிலைட் ரைபிள் அகாடமி பதக்கம் வென்று சாதனை!
துத்துக்குடி மீளவிட்டானில் அமைந்திருக்கும் டிலைட் பப்ளிக் பள்ளியின் ஒரு அங்கமாக டிலைட் ரைபிள் அகாடமி இயங்கி வருகிறது.
டிலைட் ரைபிள் அகாடமியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு நன்கு தேர்ந்த பயிற்சியாளர்களால் ஏர் ரைபிள் மற்றும் ஏர் பிஸ்டல் சூடுவதற்கு பயிற்சி அளித்து வரப்படுகிறது.
மாநில அளவிலான 2 வது ஜிசி இன்டர் கிளப் துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் 2025 திண்டுக்கல்லில் உள்ள ஜிசி சூட்டிங் அகாடமியில் நடைபெற்றது.
இப்போட்டியில் டிலைட் பள்ளி முதல்வர், டிலைட் பள்ளி மாணவர்கள், பள்ளியின் செயலாளர் மற்றும் டிலைட் ரைபிள் அகாடமியின் உறுப்பினர்கள் 10மீ ஏர் பிஸ்டல் மற்றும் ஏர் ரைபிள் போட்டிகளில் பங்கேற்றனர்.

இப்போட்டியில் மெர்லின் பிரமிளா தங்கப் பதக்கத்தையும், பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி, பயிற்சியாளர் டோனிக் சத்யா மற்றும் மாணவி சத்யா வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர். மாணவி ரக்ஷனா சாய்வி வெண்கல பதக்கத்தையும் வென்றார்.
இந்தப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றவர்களையும் டிலைட் பள்ளி மாணவ மாணவியரையும், டிலைட் ரைபிள் அகாடமி உறுப்பினரையும், டிலைட் ரைபிள் அகாடமி பயிற்சியாளர்களின் முயற்சிகளையும் டிலைட் பப்ளிக் பள்ளியின் தலைவர் ஜெய சீலன், தாளாளர் பிரபாகரன் ஜான் ஜெயக்குமார், பயிற்சியாளர் அண்டோனி மால்லன்,நட்டர்ஜி ஊக்குவித்து பாராட்டினர்.












