கோவில்பட்டி கே. ஆர். கல்லூரி மாணவர்கள் தமிழக ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியில் விளையாட தகுதி

கோவில்பட்டி கே. ஆர். கல்லூரி மாணவர்கள் தமிழக ஜூனியர் ஆண்கள் ஹாக்கி அணியில் விளையாட தகுதி

இந்தியாவின் 15வது ஜூனியர் தேசிய ஹாக்கி போட்டி பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் 12- 08-2025 முதல் 23- 08- 2025 வரை நடை பெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாடு அணிக்கான பயிற்சி முகாம் கடந்த பத்து நாட்களாக கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடந்தது.

இதில் கே. ஆர். கல்லூரி மாணவர்கள் அருண் , சீனிவாசன் , தனுஸ்பாண்டியன் நந்தகுமார் மற்றும் பிரவின் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அணிக்கு தேர்வாகியுள்ளனர்.

ஹாக்கி போட்டியில் விளையாட தகுதி பெற்ற மாணவர்களை கல்லூரியின் தலைவர், கல்லூரியின் செயலர், முதல்வர், பயிர்ச்சியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பாராட்டினர்.