நாகூர் தர்கா 468 ம் ஆண்டு கந்தூரி விழா :
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு டிசம்பர் 1 ம் தேதி உள்ளூர் விடுமுறை
தமிழகத்தில் பொது விடுமுறையை தவிர்த்து கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதேபோல் இந்த விடுமுறையானது பள்ளிகளுக்கு மட்டும் பொருந்துமா அல்லது பள்ளி, கல்லூரிகளுக்கு பொருந்துமா என்ற முடிவையும் மாவட்ட ஆட்சியர்கள் தீர்மானிக்கின்றனர்.

இந்நிலையில் நாகூர் தர்காவின் 468-ம் ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு, டிசம்பர் 1 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை விடுமுறை வருவதனால் பள்ளிகளுக்கு சனி, ஞாயிறு மற்றும் திங்கள் என தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறைகள் வருவதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த விடுமுறை பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொருந்தும்












