தூத்துக்குடி ஏ. பி. சி மகாலட்சுமி கல்லூரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம்
என். எல். சி.தமிழ்நாடு பவர் லிமிடெட் தூத்துக்குடி பொறுப்புணர்வு திட்டத்தின் உதவியுடன் தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் 23/11/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

காலை 9 மணி அளவில் தொடங்கிய முகாமிற்கு என்.எல்.சி லிமிடெட் CEO அனந்தராமானுஜம் தலைமை தாங்கினார்.
ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் முதல்வர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார்.வழக்கறிஞர் D.A.பிரபாகர் மற்றும் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணிக்கம் ஆகியோரின் ஆதரவுடன் துவங்கப்பட்டது.
மேலும் செந்தூர்பாண்டி தலைமை செயற்குழு உறுப்பினர், முன்னாள் ஊராட்சித் தலைவர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று முகாமை சிறப்பித்தனர்.

முகாமிற்கு ஒரு நாள் முன்பதாக 18 நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் தங்களது பங்களிப்பை புதியம்புத்தூர் மக்களுக்கு நோட்டீஸ் வழங்குவது மற்றும் பேரணியை நடத்துவது மூலம் செயல்படுத்தினர். ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட (அணி எண்கள் 47 & 57) ஒருங்கிணைப்பாளர்களான வேதியியல் துறை பேராசிரியர் ஸ்டெல்லா பாக்கியம் மற்றும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் புஷ்பகவல்லி ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு திறம்பட வழிநடத்தப்பட்டது.

கணிதத்துறை உதவி பேராசிரியர்களான Dr.மகேஸ்வரி, Dr.பால தீபஅரசி, தாவரவியல்துறை உதவிப் பேராசியர் Dr.சொர்ணலட்சுமி ஆகிய மூவரும் இம்முகாமை வழிநடத்தி ஊக்கமளித்தனர்.
இந் நிகழ்ச்சி சிறப்புடன் நடப்பதற்கு உறுதுணையாக ஏ.பி.சி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சுமார் 27 பேர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்தனர். இந்த இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமில் ஏறத்தாழ 238 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். கண் பரிசோதனை செய்து கொண்ட பொதுமக்களுக்கு மருந்துகள் மற்றும் கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன. கண் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு அரவிந்த் மருத்துவ மனையில் வைத்து இலவசமாக சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.













